1.புழுதி பறந்த ரணகளத்தே புறப்பட்ட இளவேனில் காலத்து சூரியனாய் காண்கிறேன் கிருஷ்ணனை.
2.துழாயும் பீலியும் வேய்ங்குழலும் அல்ல கிருஷ்ணன்.
பாழிலே பெண்களுடன் பரதமிடும் பொல்லாப் பிள்ளை அல்ல அவன்.
3.கழு விலும் ஏறுவேன், காஷாயமும் எனக்குச் சரியே. இப்போரில் இலை மகிழ்வு என்ற பார்த்தனை போரிடப் பணித்தவன் கிருஷ்ணன்.
புழுதி பறந்த ரணகளத்தே புறப்பட்ட இளவேனில் காலத்து சூரியனாய் காண்கிறேன் கிருஷ்ணனை.
4.தொழுது ஏற்றி நின்றார்க்கு
வழுவு இலாது பொருளும் இன்பமும் இடுபவன் அல்ல கிருஷ்ணன்..
5.கழுகு போல் அவனை நோக்கி இருப்பார்க்கு
உழுது ப்ண்பட்ட நிலம் போன்ற மனம் உள்ளார்க்கு
பழுதின்றி மோட்சம் அளிக்கும் யோகேச்வரன் அவன்.
6. மழுவும் வாளும் கேடயமும்
ஆழியும் சங்கும் அம்பராத்துணியும்
வார்சிலையும் கொண்டான் அவன்.
7. வீரன் ஆயினும் ஆயுதம் வேண்டான்
தீரன் ஆயினும் தேர்த்தட்டில் கடிவாளம் மட்டுமே கைப்பற்றினான் அவன்.
8. நூல் கொண்டு செலுத்தியது பரிகள் மட்டும் அல்ல
வேல் கொண்ட வெல்லொணா மாந்தர் அனைவரையும்
சேல் கொண்ட விழியாளர்களையும்.
மால் கண்டு மருகக் கண்டு
ஆல் போல் அரவணைத்து எமை
9. எற்றைக்கும் ஏழேழ் பிறவர்க்கும் அடிமை கொண்டு
மற்றை காம்ங்கள் மாற்றும் ஆண்டான் அவன்.

No comments:
Post a Comment